இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 02.03.2026

- அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் ஈரானுட்ன் போர் புரிந்து வருவதால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பகுதிகளில் உள்ள அணைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டதால் அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்த் திரைப்பட நடிகர் அஜீத்குமார், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் இந்தி நடிகை சோனல் சவுகான் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்.
- வேலை காரணமாகவும் கல்வி பயிலவும் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பகுதிகளுக்கு சென்றுள்ள இந்தியர்கள் அணைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
- ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்க தயாராக உள்ளதாக தெரிவித்து பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டறிக்கை.
- ஈரான் மற்றம் அதன் புதிய தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ஒப்புதலை தெரிவித்துள்ளார்.
- ஈரானை தாக்கும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு வட கொரியா அரசு கடும் கண்டனம்!
- மதுரையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உறவினருடன் பைக்கில் சென்ற மாணவி பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தபோது அரசுப் பேருந்து மோதியதில் படுகாயமடைந்த மாணவி துர்காதேவி(17) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரணை.
- ஈரான் போர் – இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு. ஈரானுக்கு ஆதரவான போராட்டங்களை கண்காணிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு.




