இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 26.02.2026

- அனில் அம்பானியின் 3716 கோடி மதிப்பிலான பங்களா முடக்கம். – அமலாக்கத்துறை முடிவு.
- 95 ஆக்டேன் தரத்தில் இ20 பெட்ரோல் விற்பனை – ஏப்ரல் 1 முதல் கட்டாயமாக்கியது ஒன்றிய அரசு.
- தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம். மார்ச் 6ம் தேதி மனுக்கள் பரிசீலனை.
- சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோர் விரைவாகவும் எளிதாகவும் நிதியுதவி பெறுவதற்கு முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதித் திட்டத்திற்கு புதிய இணையதளத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்துள்ளார். https://cmarf.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பித்து நேரடியாக வங்கிக் கணக்கிற்கே நிதியுதவியை பெற முடியும்.
- இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து கிராம் ரூ.14920க்கும் சவரன் ரூ.119360க்கும் விற்பனை ஆகிறது.









