Connect with us

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (06/10/2020)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

06-10-2020 

செவ்வாய்கிழமை

 

மேஷம்

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில்  சுக்ரன் –  தைரிய ஸ்தானத்தில் ராஹூ – பஞ்சம ஸ்தானத்தில்  சந்திரன் –  பாக்கிய ஸ்தானத்தில்  கேது, சனி –  தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்,   குரு (அதி. சா) – அயன, சயன, போக ஸ்தானத்தில்   புதன், சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  

இன்று மாலை 3.35 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற் சோர்வுகள் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண் டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்க ளில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

ரிஷபம்:

கிரகநிலை:

ராசியில்  சுக்ரன் – குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ –   சுக  ஸ்தானத்தில்  சந்திரன்  – அஷ்டம ஸ்தானத்தில்  கேது, சனி  – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்,   குரு (அதி. சா)  – லாப ஸ்தானத்தில்  புதன், சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று மாலை 3.35 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்தியோ கத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர் பாக அலைய நேரிடலாம். குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனை கள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே  விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மிதுனம்:

கிரகநிலை:

ராசியில்  ராஹூ – தைரிய ஸ்தானத்தில் சந்திரன் – களத்திர ஸ்தானத்தில்   கேது, சனி – அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) –  தொழில் ஸ்தானத்தில்  புதன்,  சூர்யன்  – அயன, சயன, போக ஸ்தானத்தில்  சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று மாலை 3.35 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். மாணவர்கள்  பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.  போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்:

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் – ரண, ருண ஸ்தானத்தில்  கேது, சனி –  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா)  –  பாக்கிய ஸ்தானத்தில்  புதன், சூர்யன் –  லாப ஸ்தானத்தில்  சுக்ரன் –  அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று மாலை 3.35 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று அடுத்தவர்களை அனுசரித்து போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும்.  பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக  பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். காரிய தடைகள் வரலாம். வழக்குகளில் சாதகமான போக்கை தரும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

சிம்மம்:

கிரகநிலை:

ராசியில் சந்திரன் – பஞ்சம ஸ்தானத்தில்  கேது, சனி –  ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) –  அஷ்டம ஸ்தானத்தில்   புதன், சூர்யன் – தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன்  –  லாப ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று மாலை 3.35 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்கு வாதங்கள் உண் டாகலாம். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9


கன்னி:

கிரகநிலை:

சுக  ஸ்தானத்தில்   கேது, சனி – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) –  களத்திர ஸ்தானத்தில்  புதன், சூர்யன் –   பாக்கிய  ஸ்தானத்தில் சுக்ரன் –  தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ –   அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று மாலை 3.35 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று கணவன், மனைவி ஒருவருக் கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும்.  பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியை தரும். உறவினர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.  வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சனை தீர பாடுபடுவீர்கள். காரிய தடை, தாமதம் ஏற்படலாம். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

துலாம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில்  கேது, சனி – சுக  ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) –  ரண, ருண ஸ்தானத்தில்   புதன், சூர்யன் –  அஷ்டம  ஸ்தானத்தில்  சுக்ரன் –  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ – லாப ஸ்தானத்தில்  சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  

 

இன்று மாலை 3.35 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று மாணவர்களுக்கு  கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். பணவரத்தில் இருந்த தடைநீங்கும். காரிய வெற்றி உண்டாகும். உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்துவீர்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9    

விருச்சிகம்:

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  கேது, சனி  –   தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) – பஞ்சம ஸ்தானத்தில்   புதன், சூர்யன் –  களத்திர ஸ்தானத்தில்   சுக்ரன் –  அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு –  தொழில்  ஸ்தானத்தில் சந்திரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று மாலை 3.35 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்சனை கள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

தனுசு:

கிரகநிலை:

ராசியில்  கேது, சனி – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) –  சுக  ஸ்தானத்தில்  புதன்,  சூர்யன் –  ரண, ருண  ஸ்தானத்தில்  சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில்  ராஹு – பாக்கிய  ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று மாலை 3.35 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று உத்தியோகத் தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும். குடும்பத்தில் இருப்பவர்களின் நட வடிக்கை டென்ஷனை ஏற்படுத் தலாம்.  கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9, 3

‘மகரம்:

கிரகநிலை:

ராசியில் செவ்வாய்,  குரு (அதி. சா) –  தைரிய ஸ்தானத்தில்   புதன்,  சூர்யன் – பஞ்சம  ஸ்தானத்தில்  சுக்ரன் –  ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ –  அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் –  அயன, சயன,  போக ஸ்தானத்தில்  கேது, சனி  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று மாலை 3.35 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

பலன்:

இன்று எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும். மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை  அதிகரிக்கும். கவனமாக  பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். காரிய  அனுகூலம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 4, 6

கும்பம்: 

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன்,  சூர்யன்  – சுக  ஸ்தானத்தில்  சுக்ரன் –  பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ  –  களத்திர  ஸ்தானத்தில் சந்திரன் – லாப ஸ்தானத்தில்  கேது, சனி – அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா)  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று மாலை 3.35 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோதைரியம்  அதிகரிக் கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

மீனம்:

கிரகநிலை:

ராசியில்  புதன்,  சூர்யன் –  தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் –  சுக ஸ்தானத்தில்  ராஹூ – ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் –  தொழில்  ஸ்தானத்தில்  கேது, சனி – லாப ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா)  என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று மாலை 3.35 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள்  கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3, 7

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

லிவ்-இன் துணைக்கு குடும்ப ஓய்வுதியம் வழங்க உத்தரவு

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 15.01.2026

Uncategorized21 மணி நேரங்கள் ago

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.01.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 14.01.2026

கட்டுரைகள்2 நாட்கள் ago

இன்றைய சிந்தனையைத் தூண்டும் கதை

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.01.2026

இந்தியா2 நாட்கள் ago

திருச்சி டூ நியு ஜலப்பைக்குரி புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை 17ம் தேதி தொடங்குகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 13.01.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 13 ஜனவரி 2026 | இன்றைய திதி, நட்சத்திரம், ராகு காலம்!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஒரே டிக்கெட்டில் பல நகரங்களுக்கு பயணம்: இந்திய ரயில்வேயின் ‘சர்க்யூலர் ஜர்னி டிக்கெட்’ விதி பற்றி தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

மாதம் ரூ.3000 பென்ஷன் – யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.01.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.01.2026

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

பழைய வரி முறை vs புதிய வரி முறை: முதலீட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்கும் போது சம்பளதாரர்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.01.2026

உலகம்5 நாட்கள் ago

இந்த வார பயாஸ்கோப். – சைகை மொழியை கற்றுத் தரும் “தி சைலண்ட் சைல்டு“

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 09.01.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய நீதிமன்ற செய்தி – பெற்றோர் உயில் எழுதாமல் இறந்தால் என்ன நடக்கும்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 ஜனவரி 2026 | Today Horoscope in Tamil

Translate »