சினிமா செய்திகள்
திருநங்கை வேடத்தில் நடிக்கும் அடா சர்மா!

பெரும்பாலும் திருநங்கை கதாபாத்திரம் என்றாலே ஆண் நடிகர்கள் தான் நடிப்பார்கள். பெண் நடிகர்கள் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டார்கள்.
இந்நிலையில், ஹிந்தி நடிகை அடா சர்மா திருநங்கை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட்டில் சென் குப்தா இயக்கும் ’மேன் டு மேன்’ படத்தில் அடா சர்மா திருநங்கையாக நடிக்கவுள்ளார்.
அடா சர்மா பிரபுதேவா நடிப்பில் சமீபத்தில் வெளியான சார்ளி சாப்ளின் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர்.
ஹிந்தி, தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.













