சினிமா செய்திகள்
துணிவு ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ஓடிடியில் தெரியுமா?

அஜித் குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடையில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் துணிவு.
திரை அரங்குகளில் மிகப் பெரிய வசூலைத் துணிவு படம் செய்து வரும் நிலையில் அந்த படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
துணிவு திரைப்படம் இதுவரையில் இந்தியாவில் 107 கோடி ரூபாயும், உலகம் முழுவதும் 175 கோடி ரூபாய் வசூலையும் செய்துள்ளது.
மேலும் படிக்க: துணிவு விமர்சனம்!
இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 20 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
ஓடிடியில் துணிவு திரைப்படம் பிப்ரவரி 2வது வாரத்தில் வெளியாகும் என தகவல்கள் கூறுகின்றன.
திரையரங்குகளில் எப்படித் துணிவு, வாரிசு படங்கள் மோதிக் கொண்டனவோ, அதே போல ஓடிடியில் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் கூறுகின்றன. இல்லை என்றால் துணிவு திரைப்படம் மார் 30-ம் தேதி ரிலீஸ் ஆகவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
வாரிசு ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 50 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகவும், படம் பிப்ரவரி 10-ம் தேதி ரிலீஸ் ஆகும் எனவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க: வாரிசு விமர்சனம்!
துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் விக்னேஷ் ஷிவன் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க: அட்லி இயக்கத்தில் அஜித்? அடேங்கப்பா இது என்ன படத்துல கூட வராத ட்விஸ்ட்டா இருக்கே!