Connect with us

இந்தியா

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

Published

on

நேற்று வெளியான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றைக் காண்போமா…

1952 ம் ஆண்டில் தொங்கு சட்டசபை அமைந்த பிறகு தற்போது 2026 ல் தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது.

அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர்

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகதி அதிமுக வேட்பாளர் திரு.கே.பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு (1,48,933 வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தமக்கு அடுத்தபடியாக வந்த தவெக ஆதரவு வேட்பாளரை விட 98110 வாக்குகள் அதிகமாக பெற்று அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் என்ற சிறப்பு பெற்றுள்ளார்.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்ற முன்னாள்அமைச்சர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னால் அமைச்சர் பெரியகருப்பன் 83,364 வாக்குகள் பெற்று அங்கு வெற்றி பெற்ற (83,365) தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியை விட ஒரே ஒரு வாக்கு குறைவாக பெற்று தோல்வி அடைந்தார்.

தமிழ்நாட்டின் பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி நன்மைகளை செய்திருந்தாலும் அறிமுகமே இல்லாத தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோற்றுப் போனார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அரசியல் அனுபவம் கொஞ்சமும் இல்லாத தவெக கட்சி 107 இடங்களை கைப்பற்றி 75 ஆண்டு காலம் அனுபவம் வாய்ந்த திமுகவையும் 50 ஆண்டு கால அனுபவம் வாய்ந்த அதிமுகவையும் அகில இந்தியாவையும் ஆட்டிப்படைக்கும் பாஜகவையும் மண்ணைக் கவ்வ வைத்து ஆட்சியை பிடிக்கும் அளவு கணிசமான வெற்றியை எட்டிப் பிடித்துள்ளது.

திமுக கூட்டணி பெற்ற மொத்த வாக்குகள் 1,54,07,967. இது 31.57%.

அதிமுக கூட்டணி பெற்ற மொத்த வாக்குகள் 1,32,84,090. இது 27.22%.

தவெக பெற்ற மொத்த வாக்குகள் 1,70,62,084. இது 34.96%.
நாதக பெற்ற மொத்த வாக்குகள் 19,49,367. இது 3.99%.

காங்கிரஸ் பெற்ற மொத்த வாக்குகள் 15,90,996. இது 3.67%.

பாமக பெற்ற மொத்த வாக்குகள் 9,59,890. இது 2.21%.

விசிக பெற்ற மொத்த வாக்குகள் 5,12,974. இது 1.18%.

தேமுதிக பெற்ற மொத்த வாக்குகள் 4,89,983. இது  1.12%.

அம்முக பெற்ற மொத்த வாக்குகள் 4,47,335. இது 1.03%.

பாஜக பெற்ற மொத்த வாக்குகள் 13,51,372. இது 3.12%.

இ.கம்யு.பெற்ற மொத்த வாக்குகள் 2,83,083. இது 0.65%.

மா.கம்யு. பெற்ற மொத்த வாக்குகள் 2,76,586. இது 0.64%.

ஐயுஎம்எல் பெற்ற மொத்த வாக்குகள் 1,41,055. இது 0.33%.

இந்த தேர்தலில் வென்ற 10 முஸ்லீம் எம்எல்ஏக்கள்

நாகப்பட்டினம்    –           ஜவாஹிருல்லா   –           திமுக

ஆம்புர்                     –           இம்தியாஸ்            –           தவெக

சிதம்பரம்               –           தமிமுன் அன்சாரி-         திமுக

அறந்தாங்கி          –           முகமது பர்வேஸ்-          தவெக

ராணிப்பெட்டை-           தாஹிரா                 –           தவெக

மயிலாடுதுறை    –           யுனுஸ்                     –           காங்கிரஸ்

பாபநாசம்              –           ஷாஜகான்             –           ஐயுஎம்எல்

வாணியம்பாடி    –           சையது பாரூக்    –           ஐயுஎம்எல்

மதுரை மத்தி        –           முஸ்தபா                –           தவெக

பாளையங்கோட்டை    வகாப்                      –           திமுக

தவெக ஒரு தொகுதி கூட வெற்றி பெறாத மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகதிகளில் ஒரே ஒரு தொகுதிகளில் கூட தவெக வெற்றி பெறவில்லை. திமுக, அதிமுக, மா.கம்யு. தலா ஒரு தொகுதியும் காங்கிரஸ் 3 தொகுதியம் வென்றுள்ளன.

சட்டமன்ற தேர்லில் 108 இடங்களில் வென்ற நிலையில் தங்களை பதவி ஏற்க அழைக்குமாறு ஆளுநருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் அனுப்பியுள்ளார். 2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக ஆளுநருக்கு அனப்பியுள்ள கடிதத்தில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

திமுக 74 சீட். அதிமுக 53 சீட். 2 பேரும் சேர்ந்து ஆட்சி அமைத்தால் 2.5 வருடம் திமுக ஆட்சி. 2.5 வருடம் அதிமுக ஆட்சி. தமிழ்நாட்டில் சாத்தியமாகுமா?

முதல் இரண்டு வருடம் முதலமைச்சர் பதவி மற்றும் சபாநாயகர் பதவியை அதிமுகவிற்குக் கொடுத்தால் கூட்டணி பற்றி பரிசீலிக்கலாம் என எடப்பாடி தரப்பு விஜய் தரப்புக்கு நூல் விட்டிருப்பதாக தகவல்.

ஆண்களுக்கு விஜய் முதலமைச்சர். பெண்களுக்கு திரிஷா முதலமைச்சர் என இரு முதலமைச்சர்கள் பதவி ஏற்பார்களா?

என பல்வேறு ஊகங்களுக்கு இடையே அடுத்த சில நாள்கள் முதல் சில மாதங்கள் வரை தமிழ்நாட்டில் அரசியல் பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்கப் போவதில்லை.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்1 நாள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

ஆரோக்கியம்1 நாள் ago

தந்தையர் தினம் 2026: அப்பாவுக்கு அன்பை சொல்ல 17 மனதை உருக்கும் வாழ்த்து வரிகள்!

ஆன்மீகம்1 நாள் ago

எண் கணிதம்: இந்த தேதிகளில் பிறக்கும் பெண் குழந்தைகள் தந்தையின் அதிர்ஷ்ட நட்சத்திரங்களா? எண் 2-ன் சிறப்பு என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

ராகு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஜூன் 30 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்! பணம், தொழில், குடும்பத்தில் சவால்கள் அதிகரிக்கலாம்

ஆன்மீகம்1 நாள் ago

சிவ யோகம் 2026: ஜூன் 24 முதல் இந்த 3 ராசிகளுக்கு சிவபெருமானின் அருள்… அதிர்ஷ்டம், செல்வம், வெற்றி குவியுமாம்!

ஆன்மீகம்1 நாள் ago

நிர்ஜலா ஏகாதசியில் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் முன்னேற்றம் கிடைக்குமா?

ஆன்மீகம்1 நாள் ago

கிரகண யோகம் 2026: சிம்ம ராசியில் சந்திரன்-கேது சேர்க்கை… இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை ஜாக்பாட்! சம்பள உயர்வுடன் 25 மாத நிலுவைத் தொகை கிடைக்குமா?

ஆன்மீகம்1 நாள் ago

கிரகண யோகம் 2026: சிம்ம ராசியில் உருவான அரிய யோகம்… இந்த 4 ராசிக்காரர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

இந்தியா6 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

கிரிக்கெட்7 நாட்கள் ago

பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட் வேட்டை… ஜூலன் கோஸ்வாமியின் சாதனையை நெருங்கிய தீப்தி சர்மா!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாவற்பழம் சாப்பிட்ட உடனே இந்த 5 உணவுகளை தவிருங்கள்! இல்லையெனில் செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 4,500 அப்ரண்டிஸ் பணியிடங்கள்; பட்டதாரிகள் ஜூன் 22க்குள் விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலாவதியான லிப்ஸ்டிக் இனி குப்பைக்கு வேண்டாம்! இதை வைத்து வீட்டிலேயே செய்யலாம் 4 அசத்தல் மேக்கப் டிப்ஸ்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! ரூ.27,000 சம்பளத்தில் Project Assistant பணி – விண்ணப்பிக்க ஜூன் 22 கடைசி நாள்!

வணிகம்7 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் ரூ.72 லட்சம் கிடைக்குமா? முழு கணக்கு இதோ!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சியாளர்களுக்கு வேலைவாய்ப்பு; நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

Translate »
For me, coding and music production are two sides of the same coin : it’s all about creating something impactful from scratch.