சினிமா
ஜிமிக்கி பொண்ணு பாடல் ரிலீஸ்; ராஷ்மிகாவின் அழகை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!

தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வெளியான வாரிசு படத்தின் ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல் ரிலீஸ் ஆகி உள்ளது. விஜய் ரசிகர்களுக்கு சன் டே ட்ரீட் கொடுக்கும் விதமாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஜிமிக்கி பொண்ணு பாடல் 2 நிமிஷம் மட்டுமே வெளியாகி உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் பேலன்ஸ் பார்ட் எங்கப்பா என கேட்டு கலாய்த்து வருகின்றனர்.

#image_title
ஆனால், அதையெல்லாம் கடந்து ராஷ்மிகாவின் அழகை பார்த்து அசந்து போன ரசிகர்கள் #RashmikaMandanna ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
சமீப காலமாக நடிகர்கள் மற்றும் நடிகைகளை அனிமேஷன் அரசர்கள் மற்றும் அரசிகள் போல ஆப் மூலம் மாற்றி வரும் டிசைனில் நடிகை ராஷ்மிகா மந்தனாவையும் அழகாக மாற்றி ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி அஜித்தின் துணிவு படத்துடன் வெளியானது. வாரிசு திரைப்படம் இதுவரை 275 கோடி வசூல் செய்துள்ளதாகவும், அஜித்தின் துணிவு படம் அதிகபட்சமாக 180 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

#image_title
ஜிமிக்கி பொண்ணு பாடலில் விஜய் அட்டகாசமான நடனம் ஆடுவதை பார்த்து ரசிப்பதா இல்லை ராஷ்மிகா மந்தனா அரைகுறையாக உடை அணிந்திருப்பதை பார்த்து ஜொள்ளு விடுவதா என ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.
கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தெலுங்கு படங்களில் நடித்து வந்த நிலையில், சுல்தான், வாரிசு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். தற்போது பாலிவுட்டில் படு பிசியக அமிதாப் பச்சன் படம், மிஷன் மஜ்னு உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ள நிலையில், அடுத்து அனிமல் படத்திலும் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.