சினிமா
அட்லி இயக்கத்தில் அஜித்? அடேங்கப்பா இது என்ன படத்துல கூட வராத ட்விஸ்ட்டா இருக்கே!

வர வர சினிமா படங்களை விட படங்கள் தொடர்பான தகவல்களும், கட்டுக் கதைகளும் செம ட்விஸ்ட் கொடுத்து ரசிகர்களை ஹைப் அடையச் செய்கின்றன. அப்படியொரு ட்விஸ்ட்டான அப்டேட் தான் இன்று முழுவதும் சோஷியல் மீடியாவை ஆட்டிப் படைத்து வருகிறது.
துணிவு படத்தை முடித்து விட்டு அடுத்ததாக இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள நிலையில், அதற்கு அடுத்து அஜித் குமார் இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக ஸ்ட்ராங் பஸ் ஒன்று சோஷியல் மீடியாவையே அதிர வைத்துள்ளது. மேலும், அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் என்றும் எக்கச்சக்க பிட்டுகள் போடப்பட்டுள்ளன.

#image_title
விஜய்யின் தெறி, மெர்சல் மற்றும் பிகில் உள்ளிட்ட படங்களை இயக்குநர் அட்லி இயக்கிய நிலையில், ஒவ்வொரு படத்துக்கும் அதிகமான ட்ரோல்களை அஜித் ரசிகர்கள் தான் பதிவிட்டு இருந்தனர். எப்படி சிறுத்தை சிவா விஜய்யை வைத்து இயக்கினால் அஜித் ரசிகர்கள் கலாய்ப்பார்களோ அதை விட மோசமாக அட்லி அஜித்தை இயக்கப் போகிறார் என்கிற தகவல் டிரெண்டானதும் விஜய் ரசிகர்கள் மீம்களாக போட்டு சும்மா வச்சு செய்து வருகின்றனர்.
அஜித் ரசிகர்களே அட்லியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்றும் இது உண்மையாக இருக்கக் கூடாது என்றும் தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

#image_title
பாலிவுட் வரை சென்று ஷாருக்கானையே இயக்கிய அட்லி அஜித் படத்தை இயக்கினால் செம பிரம்மாண்டமாகவும் புரொடக்ஷன் வேல்யூ உள்ள படமாக செம தாறுமாறாக இருக்கும் என்றும் திடீர் அட்லி ரசிகர்களாகவும் சில அஜித் ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவே மாறிவிட்டது தான் வேடிக்கை.