சினிமா செய்திகள்
பதான் படத்தை மிகப் பெரிய விலைக்கு வாங்கிய அமேசான் ப்ரைம்.. எப்போது ஓடிடியில் வெளியாகும்?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடிப்பில் 4 வருடங்களுக்குப் பிறகு வெளியான திரைப்படம் பதான். கடைசியாக 2018-ம் ஆண்டு ஜீரோ என்ற படம் தான் இவரது நடிப்பில் வெளியானது.
இந்திய ரா உளவு அமைப்பை பின் புலமாகக் கொண்டு உருவாகிய இந்தியத் திரைப்படம், குடியரது தின சிறப்புப் படமாக ஜனவரி 25-ம் தேதி ரிலீஸ் ஆனது.
பல பிரமாண்ட ஆக்ஷன் காட்சிகளுடன் ஷாருக் ரசிகர்களுக்கு இந்தப் படம் பெரும் விருந்தாக அமைந்திருந்த நிலையில், கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர் படங்களை முந்தி வசூலில் சாதனை படைத்து வருவதாக பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க: பதான் விமர்சனம்!
இந்நிலையில் பதான் படத்தை அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் 100 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாகவும், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த படத்தை வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.
ஆனாலும் பதான் திரைப்படத்தை எப்போது ஓடிடியில் வெளியிடுவார்கள் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
பொதுவாக அண்மைக் காலமாக வெளியாகி வரும் திரைப்படங்கள் திரைக்கு வந்த 30 நாட்களில் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகி வரும் நிலையில், பதான் திரைப்படம் 3 மாதங்களுக்குப் பிறகு அதாவது ஏப்ரல் மாதத்தில் தான் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.
பதான் திரைப்படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக் கான் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஷாருக் கான் ஜோடியாக நயன்தாரா நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.