தமிழ்நாடு
தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை: கலெக்டர்களின் அடுத்தடுத்த உத்தரவு!

கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களில் வர தடை செய்யப்படுவதாக அடுத்தடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உத்தரவு பிறப்பித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் தியேட்டர்கள், மால்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வருவதற்கு தடை விதிக்கப்படுவார்கள் என தமிழக அரசின் சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை செயல்படுத்தும் வகையில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் சமீபத்தில் மால்கள் தியேட்டர்கள் உள்பட பொது இடங்களுக்கு தடுப்பூசி செலுத்தாதவர்கள் வர தடை செய்யப்படுவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் தேனி மாவட்ட கலெக்டரை அடுத்து தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரும் இது குறித்த உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் தியேட்டர்கள் வணிக வளாகங்கள் சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட 18 இடங்களில் செல்ல தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி கிருஷ்ணகிரியை அடுத்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கலெக்டர்கள் இதேபோன்ற உத்தரவை பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதால் கண்டிப்பாக அனைவரும் தடுப்பூசி செலுத்தியே தீர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


















