சினிமா
தி கேரளா ஸ்டோரி விமர்சனம்: படமா கூட பார்க்க நல்லா இல்லையே.. வெறும் வாட்ஸப் ஃபார்வேர்ட் தான் கதையே!

பாஜக அரசு இஸ்லாமிய மதத்துக்கு எதிரான படங்களை தொடர்ந்து ஊக்கு வித்து வருவது பிரதமர் மோடியே தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைத் தொடர்ந்து இந்த தி கேரளா ஸ்டோரி படத்துக்கும் ஆதரவு தெரிவித்திருப்பதிலேயே தெரிகிறது.
பல்வேறு சாதிகள், பல்வேறு மொழிகளுடன் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வரும் இந்திய நாட்டை பாஜக அரசு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்கிற கொள்கைகளுக்குள் கொண்டு வரப் பார்க்கிறது என்றும் அதற்கு சினிமாவை ஒரு ஆயுதமாக மாற்றி வருவதாகவும் கூறுகின்றனர்.

#image_title
கடந்த சில ஆண்டுகளாக இந்து மதத்தை தழுவி ஏகப்பட்ட படங்கள் வெளியாகி வருகின்றன. ஆர்ஆர்ஆர், காந்தாரா, ராம் சேது, கார்த்திகேயா 2, பொன்னியின் செல்வன் என பல படங்கள் வலது சாரி சிந்தனையை விதைக்கும் விதமாகவே உருவாக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.
அது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தி காஷ்மீர் ஃபைல்ஸ், தி கேரளா ஸ்டோரி போன்ற படங்களை உருவாக்கி இஸ்லாமியர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது என எதிர்கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அளவுக்கு இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.

#image_title
கேரளாவை பற்றிய கதையை கேரள இயக்குநர்கள் யாருமே இயக்காத நிலையில், பாலிவுட் இயக்குநர் சுதிப்தோ சென் எந்தவொரு ஃபீல்டு அறிவும் இல்லாமல் வெறும் வாட்ஸப் ஃபார்வேர்டுகளை மட்டுமே வைத்துக் கொண்டு வேறு சில ஆதாயங்களுக்காக இயக்கி உள்ளார் என்பது படத்தை பார்த்தாலே தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
காசர் கோடில் கதை நடப்பதாக கூறப்படும் நிலையில், காசர்கோடு பீச்சை கூட வேறு எங்கோ எடுத்து விட்டு காசர்கோடு என்கின்ற அபத்தமெல்லாம் படத்தில் அதிகம் உள்ளன.
தி கேரளா ஸ்டோரி கதை: ஷாலினியாக நடித்துள்ள பாலிவுட் நடிகை அதா ஷர்மா சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதியாக மாறிய நிலையில், அவர் பிடிபடும் நிலையில், அவரது முன் வரலாறு படமாக விரிகிறது.
ஷாலினி எனும் அய்யர் வீட்டுப் பெண்ணாக கேரளாவில் இருக்கும் அதா ஷர்மா நர்சிங் படிப்பதற்காக காசர்கோடில் உள்ள ஹாஸ்டலில் தங்குகிறார். அவருடன் வெந்து தணிந்தது காடு ஹீரோயின் சித்தி இத்னானி, ஒரு கிறிஸ்துவ பொண்ணு, ஒரு முஸ்லிம் பொண்ணு தங்குகின்றனர்.
அந்த இஸ்லாமிய பெண் ஐஎஸ் தீவிரவாதியின் ஆள் என்கிற நிலையில், இந்த மூன்று பெண்களையும் பிரைன் வாஷ் செய்து இஸ்லாம் மதத்துக்கு மாற்றுகிறார். பர்தா அணிந்தால் பாலியல் பலாத்காரமே நடக்காது என்றும் அல்லா தான் ஆகச் சிறந்த கடவுள் என்றும் சொல்லி சொல்லியே அந்த பெண்களை மூளைச்சலவை செய்து மதமாற்றம் செய்கிறார்.
மேலும், இஸ்லாமிய இளைஞர்களை வைத்துக் கொண்டு அந்த பெண்களை காதலிக்க வைத்து கர்ப்பம் ஆக்கி விடுகின்றனர். நடிகை அதா ஷர்மா தனது கணவருடன் சிரியா செல்லும் போது தான் ஐஎஸ் தீவிரவாதியாக மாற்றவே இப்படியொரு சூழ்ச்சியை இஸ்லாமியர்கள் செய்துள்ளனர் என்றும் இந்து பெண்களை அங்கே கொண்டு வந்து தீவிரவாதிகளாகவும் பாலியல் தொழில் செய்பவர்களாகவும் மாற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்ளும் அதா ஷர்மா அந்த நரகத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்யும் நிலையில், தப்பித்தாரா? இல்லையா? என்பது தான் இந்த தி கேரளா ஸ்டோரி படத்தின் கதை.
சுமார் 32 ஆயிரம் பெண்கள் கேரளாவில் இருந்து இப்படி மதமாற்றம் செய்யப்பட்டு சிரியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிரவாதிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என்கிற கதையை வைத்து இப்படியொரு படத்தை இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கி உள்ளார்.
அதா ஷர்மா தனது நடிப்பால் படத்தை தாங்கி நிறுத்த முயன்றாலும், மற்ற கதாபாத்திரங்கள் எதுவுமே ஆழமாகவோ அழுத்தமாகவோ எழுதப்படவில்லை. நொடிக்கு நொடி இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்கிற பிரச்சாரத்தை செய்வதிலேயே இயக்குநர் குறியாக உள்ள நிலையில், படம் ரசிக்கும் படியாக கூட இல்லை. மேலும், இது போல பல படங்கள் விரைவில் வெளியாகும் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
ரேட்டிங்: 1/5.