தமிழ்நாடு
டாஸ்மாக் கடைகள் 6 நாட்கள் மூடப்படுகிறதா? குடிமகன்கள் அதிர்ச்சி

டாஸ்மாக் கடைகள் இந்த மாதம் மொத்தம் ஆறு நாட்கள் மூடப்படும் என தகவல் வெளியாகியுள்ளதால் குடிமகன்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதும் டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஜனவரி 15, ஜனவரி 18, மற்றும் ஜனவரி 26 ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம் என்பதாலும், ஜனவரி 18ஆம் தேதி வடலூர் வள்ளலார் தினம் என்பதாலும், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் என்பதாலும் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமன்றி வரும் 9ஆம் தேதி ஞாயிறு அன்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அன்றைய தினமும் டாஸ்மாக் மூடப்படும். மேலும் முழு நேர ஊரடங்கு இந்த மாதம் முழுவதும் நீடிக்கப்பட்டால் ஜனவரி 16, 23 ஆகிய தேதிகளிலும் டாஸ்மாக் மூடப்படும் என்பதால் இந்த மாதம் டாஸ்மாக் கடைகள் மொத்தம் ஆறுநாட்கள் மூடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


















