சினிமா செய்திகள்
வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டார்; நன்றி தெரிவித்த ஸ்டாலின்!

2019 மக்களவைத் தேர்தலில் 37 தொகுதியில் திமுக கூட்டணி வெற்றிபெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே திமுக தலைவர் மு க ஸ்டாலிக்கு வாழ்த்து தெரிவித்து, நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டர் மூலமாக வாழ்த்து கூறியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
— Rajinikanth (@rajinikanth) May 23, 2019
ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த ரஜினிகாந்த் “பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.
ரஜினிகாந்த்தின் வாழ்த்துக்குப் பதில் தெரிவித்திருந்த திமுக தலைவர் ஸ்டாலின், “தங்களின் வாழ்த்துகளுக்கு அன்பும்! நன்றியும்! @rajinikanth” என்று குறிப்பிட்டு இருந்தார்.
தங்களின் வாழ்த்துகளுக்கு அன்பும்! நன்றியும்! @rajinikanth https://t.co/wbgYz0ZxRs
— M.K.Stalin (@mkstalin) May 23, 2019
தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக அதிக தொகுதிகளில் வெற்றிபெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.








