இந்தியா
ஓட்டலில் வேலை செய்யும்போதே படிக்கும் இளம்பெண்.. ஐபிஎஸ் அதிகாரி பகிர்ந்த வைரல் புகைப்படம்..!

கல்வி என்பது மிகவும் இன்றி அமையாதது என்பதும் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரர்களாக வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி கல்விதான் என்றும் நல்ல கல்வியை கற்றவர்கள் என்றுமே வறுமையில் வாடுவதில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேலை செய்யும் போது கூட படிப்பில் அக்கறை இருந்தால் கண்டிப்பாக ஒரு மாணவரோ, மாணவியோ படிக்கலாம் என்று ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் வெளியிட்ட புகைப்படம் தெரிவித்துள்ளது.
சப்வே என்ற உணவகத்தில் வேலை பார்க்கும் ஒரு இளம் பெண் வாடிக்கையாளர்கள் வருவதற்கும் செல்வதற்கும் இடையில் கிடைக்கும் நேரத்தில் புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டிருந்தார். அவருடைய விடா முயற்சியை ஐபிஎஸ் அதிகாரி திபன்சு குமார் என்பவர் பார்த்து புகைப்படம் எடுத்து அதை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
பெண் ஊழியர் ஒருவர் புத்தகத்துடன் கவுண்டருக்கு பின்னால் நின்று படித்துக் கொண்டிருந்ததை பார்த்தேன். விடா முயற்சி உடன் வேலை செய்தாலும் படிப்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் என் மனதை கவர்ந்தது என்று தெரிவித்துள்ளார். அந்த பெண் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் என்ற பகுதியில் உள்ள சப்வே என்ற உணவகத்தில் பணிபுரிகிறார் என்பது அடையாளம் காணப்பட்டது.
வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து கொண்டே ஓய்வு நேரத்தில் அவர் புத்தகங்களை எடுத்து படித்துக் கொண்டிருந்தார் என்பதும் படிக்க நேரமே இல்லை என்று சொல்பவர்களுக்கு இவர் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் ஐபிஎஸ் அதிகாரி திபன்சு குமார் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.
हो कहीं भी आग लेकिन, आग जलनी चाहिए…
मिलिए करीना से. @AmbujaMall, रायपुर स्थित @SubwayIndia में जॉब करती हैं. कस्टमर्स के आने जाने के बीच, जो थोड़ा समय मिलता हैं उसमें पढ़ाई कर लेती हैं.
"टाइम नहीं मिलता" का बहाना बनाने वाले, सीखें कि 1-1 मिनट का ऐसे भी उपयोग हो सकता है. pic.twitter.com/XkPuJATvCN
— Dipanshu Kabra (@ipskabra) March 2, 2023
உங்களுக்கு படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் கண்டிப்பாக நேரமும் இருக்கும் என்றும் ஒரு வயதான மனிதர் என்னிடம் நீண்ட காலத்திற்கு முன்னால் பேருந்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போதே நான் தினமும் படித்தேன் என்று கூறியதையும் நெட்டிசன் ஒருவர் பகிர்ந்து உள்ளார்.
இன்னொருவர் நான் 13 வயதிலிருந்து வேலை செய்து கொண்டே படித்தேன் என்றும் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து கொண்டே படிப்பேன் என்றும் பஞ்சாபில் எனது நண்பர்கள் பலர் இப்படித்தான் வளர்ந்தார்கள் என்றும் ஆனால் நாளடைவில் அந்த வழக்கம் முற்றிலும் மாறிவிட்டது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.