Connect with us

இந்தியா

2100ஆம் ஆண்டு சென்னை, கொல்கத்தா இருக்காதா.. அதிர்ச்சி தகவல்..!

Published

on

உலகம் முழுவதும் கடல் மட்டம் அதிகரித்து வருவதை அடுத்து கடலோர பகுதியில் உள்ள பல நகரங்கள் மூழ்கும் என்று ஆராய்ச்சிகள் கூறிவரும் நிலையில், 2100 ஆம் ஆண்டு தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தா ஆகிய இரண்டு நகரங்களுக்கும் மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்ற ஆராய்ச்சியின் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் இரண்டு பெரிய மெட்ரோ நகரங்களான சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய இரண்டு நகரங்கள் கடல் மட்ட உயர்வு காரணமாக மாபெரும் அபாயத்தில் இருப்பதாக சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள வளிமண்டல ஆராய்ச்சிக்கான தேசிய மையம் கடல் மட்டம் உயர்வு குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயற்கை ஏற்ற இறக்கங்கள் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது என்றும் இதனால் கடலோரங்களில் உள்ள நகரங்கள் தாக்கத்திற்கு ஆளாகலாம் என்றும் கடல் மட்ட உயர்வை குறைப்பதற்கு விஞ்ஞானிகள் தகுந்த தீர்வு காண வேண்டும் என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் காரணமாக அதிவேகமாக கடல் மட்டம் அதிகரித்து வருகிறது என்றும் சில இடங்களில் கடல் மட்டம் 20 முதல் 30 சதவீதம் வரை இன்னும் சில ஆண்டுகளில் அதிகரிக்கலாம் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கொல்கத்தா மட்டுமின்றி மும்பை, கொச்சி, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், மங்களூர் ஆகிய இந்திய நகரங்களும் 2050 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயர்வு அதன் காரணமாக அபாயத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வு முடிவு மூலம் தெரிய வந்துள்ளது.

காலநிலை மாற்றத்திற்கான குழுவை ஐநா சமீபத்தில் அமைத்த நிலையில் புவி ஆராய்ச்சி அமைச்சகத்தின் அறிக்கையில் வட இந்திய பெருங்கடல் சுமார் 300 மீட்டர் வரை உயரும் என்று கணித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரோக்கியம்38 mins ago

சிக்கன் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா…!

வேலைவாய்ப்பு1 hour ago

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

டாடா மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

சினிமா2 hours ago

அனுராக் கஷ்யப்பை இயக்கும் சசிக்குமார்?

வேலைவாய்ப்பு2 hours ago

ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் டாடா மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

வணிகம்3 hours ago

இன்றைய தங்கம் விலை (26/03/2023)!

சினிமா செய்திகள்4 hours ago

‘கீர்த்தி சுரேஷிடம் இதைக் கேட்கவே மாட்டோம்’- மேனகா சுரேஷ்

இந்தியா5 hours ago

எதற்கும் நான் பயப்பட மாட்டேன்: ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு!

சினிமா செய்திகள்17 hours ago

‘பகாசூரன்’ படத்திற்கு திட்டமிட்ட எதிர்வினை’- இயக்குநர் மோகன்.ஜி

இந்தியா18 hours ago

இந்தியாவின் அடுத்த தலைமுறை கோடீஸ்வரர்கள் – தொழிலதிபர்கள் இவர்கள் தான்..!

வேலைவாய்ப்பு5 days ago

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 500

வணிகம்6 days ago

இன்று தங்கம் விலை மாற்றமில்லை (20/03/2023)!

உலகம்6 days ago

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

உலகம்6 days ago

ஏப்ரல் 1 முதல் 4000 ஊழியர்களின் வேலை காலி? பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி முடிவு..!

கிரிக்கெட்7 days ago

2nd ODI: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

வேலைவாய்ப்பு6 days ago

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

உலகம்5 days ago

அமேசானின் அடுத்தகட்ட வேலைநிக்கம்.. 9000 பேர்கள் வேலை காலியா?

ugc
வேலைவாய்ப்பு5 days ago

ரூ.2,10,000/- ஊதியத்தில் UGC – ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 868