இந்தியா
இந்தியாவில் திடீரென அதிகரித்த ப்ளூ காய்ச்சல்.. ஐசிஎம்ஆர் வெளியிட்ட புதிய அறிவுரை லிஸ்ட்!

டெல்லி: இந்தியாவில் பலருக்கும் திடீரென மர்ம காய்ச்சல் அதிகரித்து வருகிறது. பலருக்கு உடல் வலி, காய்ச்சல், சளி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
நாடு முழுக்க பலருக்கும் இந்த காய்ச்சல் அதிகம் ஏற்படுகிறது. வயதானவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என்று இல்லாமல் எல்லோருக்கும் பரவலாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது. சமூக வலைத்தளங்களிலும் பலர் இதை பற்றி போஸ்ட் செய்துள்ளனர். இந்த திடீர் காய்ச்சலுக்கு என்ன காரணம் என்று ஐசிஎம்ஆர் விளக்கி உள்ளது.

Flu Fever
காரணம் என்ன?
- ப்ளூ காய்ச்சலால் Influenza A subtype H3N2 மூலம் ஏற்படும் காய்ச்சல் ஆகும் இது.
- கடந்த 2-3 மாதங்களாக இது பரவி வருகிறது.
- இது வைரஸ் என்பதால் ஆண்டிபயாடிக் இதற்கு எதிராக வேலை செய்யாது.
- இது கொரோனா கிடையாது.
- காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்.. செய்ய கூடாது என்றும் இவர்கள் பட்டியலிட்டு உள்ளனர்.
செய்ய வேண்டிய விஷயங்கள்:

Flu Fever treatment
என்ன செய்ய வேண்டும்?
- கைகளை கழுவ வேண்டும்.
- இது வைரஸ் என்பதால் மாஸ்க் அணிவது நலம்.
- தும்மும் போது மூக்கை மூட வேண்டும்.
- அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
- மிதமான உணவுகளை உன்ன வேண்டும்.
செய்ய கூடாத விஷயங்கள்:

Flu Fever Vaccine
- ஐஸ் பயன்படுத்த பொருட்களை உட்கொள்ள வேண்டாம்
- அதிக காரமான உணவுகளை உட்கொள்ள வேண்டாம்
- பனியில் சுற்ற வேண்டாம்
- கைகுலுக்குவதை தவிர்க்கவும்
- பொது இடத்தில் எச்சில் துப்பாதீர்கள்
- உங்கள் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும்
- ஆண்டிபயாடிக் எடுக்க வேண்டாம்
- மற்றவர்களுக்கு அருகில் அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்கவும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.















