இந்தியா
Something went wrong: டுவிட்டர் பக்கங்களில் ஏற்பட்ட திடீர் பிரச்சனை!

டுவிட்டர் பக்கங்களில் திடீரென பிரச்சனை ஏற்பட்டு உள்ளதாகவும் பல பயனாளிகளுக்கு டுவிட்டர் செயல்படவில்லை என்றும் கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மட்டுமே கோடிக்கணக்கானோர் இந்த சமூக வலை தளத்தை பயன்படுத்தி வரும் நிலையில் திடீரென சற்று முன்னர் டுவிட்டர் பக்கத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பலர் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
ஒரு சில குறிப்பிட்ட ட்வீட்களை கிளிக் செய்யும்போது Something went wrong, Try reloading என்று வருவதாகவும் டுவிட்டர் பயனாளிகள் பதிவு செய்து வருகின்றனர். இந்த தகவல் தற்போது டுவிட்டர் நிர்வாகத்திற்கு தெரியவந்துள்ளதாகவும் இதனை அடுத்து இந்த குறையை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப கலைஞர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சனையை ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் ஒரு சில நிமிடங்களில் இந்த பிரச்சனையை சரிசெய்யப்படும் கூறப்படுகிறது.
டுவிட்டர் பக்கங்களில் உள்ளே நுழைந்தால் Something went wrong. Try reloading என்று வருவதாக பயனாளர்கள் தொடர்ச்சியாக புகார் அளித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு டுவிட்டரிலேயே இது டிரென்ட் ஆகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டுவிட்டரில் இதே போன்று பல முறை பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பிரச்சினை உடனடியாக சரி செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.







