வீடியோ
சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ராக்காச்சி ரங்கம்மா பாடல் ரிலீஸ்!

பிச்சைக்காரன் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சசி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ராக்கச்சி ரங்கம்மா எனும் காதல் டார்ச்சர் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் சித்து குமார் இசை மற்றும் மோகன் ராஜன் பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை அனிதா கார்த்திகேயன் பாடியுள்ளார்.
காதல் டார்ச்சர் குறித்த பாடல் என்பதால், இளைஞர்களின் உடனடி ஃபேவரைட் லிஸ்டில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது.
சித்தார்த் மற்றும் ஜி.வி, பிரகாஷ் குமார் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தாலும், வெற்றியை ஈட்ட முடியவில்லை. இந்நிலையில், பிச்சைக்காரன் எனும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த சசி, இயக்கத்தில் இருவரும் நடித்துள்ளதால், இந்த படத்தின் வெற்றியை பெரிதும் எதிர்நோக்கியுள்ளனர்.