இந்தியா
திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்கக்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (08.05.2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்குச் சென்று, தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தமிழக மின் ஆளுமை முகமையின் உதவியுடன், இந்த ஆண்டு முதன்முறையாக வாட்ஸ்அப் மூலம் முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு “Hi” என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பிபினால் தேர்வு முடிவுகள் வாட்ஸ்அப்பிற்கே வந்துவிடும்.
மேலும், மாணவர்கள் பள்ளியில் பதிவு செய்த செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) மூலமம் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பள்ளிகளுக்கும் நேரடியாகச் சென்று மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அல்லது மன அழுத்தத்திற்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்: உதவி மையம்: 14417; ஆலோசனை எண்கள்: 104 / 14416. ஆசிரியர்களும் பெற்றோரும் இந்த நேரத்தில் மாணவர்களுக்குத் துணையாக நின்று, அவர்களுக்குத் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

















