தமிழ்நாடு
சென்னை சிக்னல்களில் இளையராஜா இசை: வானக ஓட்டிகள் மகிழ்ச்சி!

சென்னை சிக்னல்களில் இளையராஜாவின் இசையை ஒலிக்க போக்குவரத்து காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளதை அடுத்து வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் திரை உலகில் மட்டுமன்றி இந்திய திரை உலகிலும் உலக அளவிலும் பிரபலமானவர் இசைஞானி இளையராஜா என்பதும் அவரது பாடல்கள் ஒலிக்காத இடமே உலகில் இல்லை என்றும் கூறலாம். அந்த அளவுக்கு அவரது ஆயிரக்கணக்கான பாடல்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன .
இந்த நிலையில் சென்னை சிக்னலில் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து வழிமுறைகளை அவ்வப்போது அறிவிக்கின்றனர். அப்போது இடையிடையே இளையராஜாவின் இசையையும் அவர்கள் ஒலிக்க செய்கின்றனர். இந்த ஏற்பாடு வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காலை, மாலை என போக்குவரத்து அதிகமாக உள்ள நேரங்களில் போக்குவரத்து விதிமுறை அறிவிப்போடு இளையராஜாவின் இசையும் இடையிடையே ஒலிப்பதால் வாகன ஓட்டிகள் இசையை ரசித்து கொண்டே செல்கின்றனர் .
மேலும் போக்குவரத்து வழிமுறைகளை கடைபிடிக்கும் அறிவிப்புகளோடு இளையராஜாவின் இசையும் ஒலிக்க விடுவதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் அறிவிப்புகளை கேட்பதாகவும் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.





















