வீடியோ
கென்னடி கிளப் டீசர் ரிலீஸ்!

கடைசி தீக்குச்சியை கொளுத்தும் போது இருக்குற கவனம்.. முதல் தீக்குச்சியை கொளுத்தும் போதே இருக்கணும்.. அப்போதான் நாம ஜெயிக்க முடியும் என சசிகுமாரின் எண்ட் பன்ச் உடன் முடியும் கென்னடி கிளப் படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
வெண்ணிலா கபடி குழு படத்தை இயக்கி வெற்றி பெற்ற இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கென்னடி கிளப் படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது. பெண்கள் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சசிகுமார் கோச்சாக வருகிறார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இமான் இசையில் பின்னணி இசை டீசரில் படத்தின் பலத்தையும் வெற்றியையும் உறுதி செய்கிறது.
இது பெண்கள் விளையாட்டு வார திரைப்படங்கள் என்று விரைவில் போடக்கூடிய அளவில் தொடர்ந்து பெண்கள் விளையாட்டை மையமாக வைத்த படங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தளபதி 63 படமும் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் வெளியான கனா படம் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெற்றி பெற்ற நிலையில், இயக்குநர்கள் பெண்கள் விளையாட்டுக்கள் குறித்த படங்கள் மீது அதீத கவனத்தை செலுத்தியுள்ளனர்.