சினிமா
பிரின்ஸ் மாதிரி ஆகிடாது; மாவீரன் ப்ரீ ரிலீஸ் பிசினஸே 100 கோடியை நெருங்கிடுச்சாம்!

கோலிவுட்டின் யங் பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவே மாறி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படங்கள் அதிரடியாக 100 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி 2 முறை சிவகார்த்திகேயனுக்கு 100 கோடி நாயகன் எனும் அந்தஸ்த்தை வாரி வழங்கின.
ஆனால், தீபாவளி ரிலீஸாக வெளியான பிரின்ஸ் படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் கே.வி. இயக்கி இருந்தார். ஆனால், அந்த படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், அடுத்ததாக இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் படத்தைத் தான் சிவகார்த்திகேயன் மலை போல நம்பியிருக்கிறார்.

#image_title
சமீபத்தில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படத்தின் சீனா சீனா பாடல் வெளியாகி செம சீனை க்ரியேட் பண்ணியிருக்கிறது என்கின்றனர். படம் நிச்சயம் பிரின்ஸ் மாதிரி சொதப்பாது என்கிற நம்பிக்கை ஏற்பட்ட நிலையில், அதிரடியாக அந்த படத்தை சுற்றி ப்ரீ ரிலீஸ் பிசினஸ் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.
மாவீரன் படத்தின் சாட்டிலைட் உரிமம், டிஜிட்டல் உரிமம், ஆடியோ ரைட்ஸ் மற்றும் தியேட்டர் ரிலீஸ் பிசினஸ் என இப்பவே 95 கோடி ரூபாய் பிசினஸ் ஆகி உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

#image_title
படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் உள்ளிட்ட விஷயங்கள் வெளியானால் ரிலீசுக்கு முன்னாடியே 150 கோடி வரை இந்த படம் வியாபாரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். யோகி பாபுவை வைத்து மண்டேலா படத்தை இயக்கிய இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்து வருகிறார். மாவீரன் படத்தை முடித்து விட்டு அடுத்ததாக கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சீதாராமம் புகழ் மிருணாள் தாகூரை ஜோடியாக போடவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.