சினிமா
ஹீரோயின் ஆனதுமே ஆட்டிட்யூட் காட்டும் அனிகா சுரேந்திரன்; குட்டி நயன்தாராவை திட்டும் ஃபேன்ஸ்!

குழந்தை நட்சத்திரமாக அஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த மலையாள நடிகை அனிகா சுரேந்திரன் தற்போது 18 வயதிலேயே ஹீரோயினாக அப்கிரேட் ஆகி விட்டார்.
ஆரம்பத்திலேயே லிப் லாக், படுக்கையறை காட்சிகள், கர்ப்பமாக நடிப்பது என படு போல்டான கதாபாத்திரங்களில் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகை என நிரூபிக்க முயற்சிகளை எடுத்து வருகிறார்.

#image_title
நயன்தாராவின் யங்கர் வெர்ஷனாக நானும் ரவுடி தான் படத்தில் நடித்த அனிகா சுரேந்திரன், பாஸ் என்கிற பாஸ்கரன் மலையாள படத்தில் மகளாகவும் அஜித் – நயன்தாரா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய விஸ்வாசம் படத்திலும் நயன்தாராவின் மகளாக நடித்து வந்த அனிகா சுரேந்திரனை அப்படியே அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கீங்க குட்டி நயன்தாரா என்றே ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.
சமீபத்தில் அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக நடித்த ஓ மை டார்லிங் படம் ஓடியதே தெரியாத நிலையில், அதற்கு சக்சஸ் பார்ட்டி ஒன்றும் நடத்தப்பட்டது. அதில், கலந்து கொண்ட அனிகா சுரேந்திரன் மேடையில் அத்தனை பெரிய நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இருக்கும் இடத்தில் அடக்கி வாசிக்காமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டும், ரொம்ப ஆட்டிட்யூட் காட்டும் விதமாக எக்ஸ்பிரசன்கள் கொடுத்த புகைப்படங்கள் வெளியான நிலையில், மலையாள சினிமா ரசிகர்கள் அனிகா சுரேந்திரனை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். சில நெட்டிசன்கள் இப்படியே போனால் அப்புறம் உருப்படவே முடியாது என்றும் திட்டி வருகின்றனர்.