சினிமா செய்திகள்
‘அம்புட்டும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்’- நடிகர் சூரியை கலாய்த்த சிவகார்த்திகேயன்..!

ட்விட்டரில் சிவகார்த்திகேயன் காமெடி நடிகர் சதீஷை கலாய்த்தது போலவே தற்போது நடிகர் சூரியை கலாய்த்துள்ளதும் வைரலாகி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் காமெடி நடிகர் ஆக நடிகர் சூரி கமிட் ஆகியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட சூரி ஆங்கிலத்தில் சிவாவுக்கு நன்றி சொல்ல அந்த ஆங்கில ட்வீட் முழுவதும் பிழைகளாக இருந்துள்ளது.
Happy to share the scren pace once akain vith my dear most buddy @Siva_Kartikeyan ????see you at the cambus buddy????♥️♥️ #DON https://t.co/ygFU9dXpzY
— Actor Soori (@sooriofficial) February 3, 2021
சூரியின் பிழைகள் நிறைந்த ஆங்கில பதிவுக்கு பதில் அளித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், “ட்வீட்ட ஒழுங்கா படி… அம்புட்டும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்’ எனக் கூறி கலாய்த்து உள்ளார்.
Buddy first tweeta olunga padi ????????????ambuttum spelling mistake ???????????? https://t.co/GxCTJVpLbU
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 3, 2021
ட்விட்டரில் சூரிக்கும் சிவாவுக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் தான் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

















