சினிமா செய்திகள்
சூர்யாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த சிவகார்த்திகேயன்!
சூர்யாவின் என்.ஜி.கே டீஸர் வெளியாகி மூன்று நாள் ஆகிறது. அதனை யூடியூபில் இதுவரை 7 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். விஜய், அஜித் டீஸர்கள் ஒரே நாளில் ஒரு கோடி பார்வையாளர்களை பெற்று வரும் நிலையில், சூர்யாவின் டீஸர் 3 நாட்களை தாண்டியும் ஒரு கோடியை எட்டவில்லை.
இந்நிலையில், நேற்று வெளியான சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்தின் டீஸர் 22 மணி நேரத்திலேயே 3.2 மில்லியன் பார்வையாளர்களை பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்த என்.ஜி.கே டீசரை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.
எம். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா சரத்குமார், சதிஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ்டர் லோக்கல் படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி படம் திரைக்கு வருகிறது.



















