சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு செம அப்டேட்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில் தமிழ் சினிமாவின் தொடர் வெற்றி நாயகன் என்ற பெருமை சிவகார்த்திகேயனுக்கு கிடைத்துள்ளது.
இதனையடுத்து அவரது அடுத்தடுத்த படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் எஸ்கே 20 என்ற படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது என்பதும் பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நாயகியாக மரியா என்ற உக்ரைன் நாட்டு நடிகை நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
தமன் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷி ஆகியுள்ளனர்.
இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தின் போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் டாக்டர் , டான் போலவே இந்த படமும் 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று கோலிவுட் திரையுலகினர் நம்பிக்கை தெரிவித்தனர்.