சினிமா செய்திகள்
நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்… கழுவி ஊற்றும் பாடகி சுசித்ரா..!

நடிகர் மற்றும் பிக்பாஸ் தொகுப்பாளர் கமல்ஹாசனை பாடகியும் பிக்பாஸ் 4 பிரபலமும் ஆன சுசித்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை 4 சீசன்களாகத் தொகுத்து வழங்கி வருபவர் நடிகர் கமல்ஹாசன். இதில் 4வது சீசனில் போட்டியாளராக மிகச் சொற்பமான நாட்களே உள்ளே இருந்துவிட்டு வெளியேறியவர் பாடகி சுசித்ரா. பைனல்ஸ் சமீபத்தில் தான் முடிந்துள்ள நிலையில் கமலை கடுமையாக விமர்சித்துள்ளார் சுசித்ரா.
சுசித்ரா கூறுகையில், “நடிகர் கமல்ஹாசன் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொள்கிறார். கமலும் அவருடைய பிராண்டும் போலியானவை. நிகழ்ச்சியில் கதர் துணிகளுக்கு ஆதரவு சின்தட்டிக் துணிகளை வியாபார நோக்கில் கேமிராவுக்காக எங்கள் கைகளில் கொடுத்தனர். தகுந்த வெற்றியாளருக்கு தோல்வியை கொடுத்தார்.


வெற்றியாளரை தானே முடிவு செய்து அவரே அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். விரைவில் அவர் ஒரு தோல்வியாளராகவே தன் பயணத்தைத் தொடங்குவார்” எனப் பல மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் உடன் ஒரு ஆங்கிலக் கவிதை வாயிலாக விமர்சித்துள்ளார் சுசித்ரா. சுசித்ரா சொல்லியது அனைத்தும் பொய் என்றும் அவர் கதர் ஆடையைத் தான் நிகழ்ச்சியில் அணிந்திருந்தார் என்றும் சுசித்ராவை ரசிகர்கள் தற்போது கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

















