Connect with us

இந்தியா

நில மாஃபியாவுக்கு எதிராக 27 வருடங்கள் போராடும் முதியவர்: பலன் என்ன?

Published

on

நில மாஃபியாவுக்கு எதிராக கடந்த 27 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வரும் முதியவர் ஒருவருக்கு இன்னும் பலன் கிடைக்காமல் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த விஜய் சிங் என்ற 60 வயதான நபர் ஊழல் மற்றும் நில மாஃபியாவுக்கு எதிராக கடந்த 27 ஆண்டுகளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவர் இதற்காக யாகம் நடத்தினார் என்பதும் ஆனாலும் அவரது கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளதால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் சிங் தனது கிராமத்தில் உள்ள அரசு நிலத்தை மாபியா கும்பல் அபகரித்ததாக கடந்த 1996 ஆம் ஆண்டு தனது பள்ளி ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு ஆட்சியர் அலுவலகத்தின் முன் தர்ணாவில் அமர்ந்தார். அன்று முதல் இன்று வரை அவர் 27 ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவரது போராட்டத்திற்கு இன்னும் முடிவு கிடைக்காமல் உள்ளது.

தனது போராட்டத்தின் காரணமாக சில சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும் ஆனால் தனது கிராமத்தில் நிலம் மாஃபியாக்களால் கைப்பற்றப்பட்ட சுமார் 1000 ஏக்கர் நிலம் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மாஃபியா பிடியிலிருந்து அரசு நிலத்தை விடுபடுவதற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்து விட்டேன் என்றும் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் அகிலேஷ் யாதவ்வை சந்தித்து இது குறித்து முறையிட்டேன் என்றும் முதல்வர் அகிலேஷ் யாதவ் அப்போது ஒரு குழு அமைத்தார் என்றும் ஆனால் அந்த குழுவால் எதுவும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.

அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து இது குறித்து தெரிவித்தேன் என்றும் பாரபட்ச விசாரணைக்கு அவர் உறுதியளித்தார் என்றும் கூறினார் அவரது நடவடிக்கை காரணமாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை கமிஷனின் 17 பக்கம் அறிக்கையில் நான் கூறிய குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது அதன் பின் லக்னோவுக்கு சுமார் பத்து முறைக்கு மேல் சென்றேன் என்றாலும் நிலத்தை மீட்க அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தற்போது அந்த குழுவினர் என்ன செய்கிறார்கள் என்று கூட எனக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

27 வருடங்களாக போராடி எனது வாழ்க்கையை இதற்காக நான் கொடுத்துள்ளேன் என்றும் ஆனாலும் இதற்கு இன்னும் விடிவு காலம் வரவில்லை என்றும் விரைவில் அரசு பொது நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது அமைதியான போராட்டம் தொடர்கிறது என்றும் தனது உயிர் உள்ளவரை போராட்டம் நடத்துவேன் என்றும் எனது ஒரே குறிக்கோள் தனது கிராமத்தில் உள்ள நிலம் மீண்டும் கிராமத்தினர் கைக்கு வர வேண்டும் என்பதுதான் என்றும் தெரிவித்துள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?