சினிமா
சிம்புவுக்கு நிச்சயதார்த்தமே ஆகலைங்க.. எல்லாமே வதந்தி.. பொண்ணு கிடைச்சா சொல்றோம்.. சிம்பு தரப்பு!

நடிகர் சிம்புவுக்கும் இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளுக்கும் நிச்சயதார்த்தம் ஆகி விட்டதாகவும், விரைவில் கல்யாணம் நடைபெற போவதாகவும் திடீரென அதிரடி தகவல்கள் பரவின.
ஏகப்பட்ட செய்திச் சேனல்களிலேயே அந்த செய்தி பரவிய நிலையில், பதறியடித்துப் போய் சிம்பு தரப்பு அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளது.

simbu
நடிகர் சிம்புவுக்கும் இலங்கையை சேர்ந்த பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் விரைவில் திருமணம் என கிளம்பிய தகவலில் கொஞ்சம் கூட உண்மையில்லை என்றும் அது முழுக்க முழுக்க வதந்தி என சிம்புவின் பிஆர்ஓ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகர் சிம்புவுக்கு பெண் கிடைத்து விட்டால், திருமணம் முடிவானால் பத்திரிகைகளுக்கும் செய்தி ஊடகங்களுக்கும் தான் முதலில் தெரிவிப்போம் என்றும் தேவையில்லாமல் வதந்திகளை எந்தவொரு மீடியாவும் பரப்ப வேண்டாம் என்றும் சிம்பு தரப்பு கேட்டுக் கொண்டது.

simbu
நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு பத்து தல படத்தில் நடித்து வருகிறார். சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி வருகிறார். கெளதம் கார்த்தி மற்றும் பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.