சினிமா
வேறலெவல் ஃப்ரேம்ஸ்.. மிரட்டும் பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் அட்டகாசமான ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
நேரு ஸ்டேடியத்தில் பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்ற நிலையில், அதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

#image_title
மேலும், நாளை பத்து தல வெளியீடு உள்ள நிலையில், நடிகர் சிம்புவும் ஸ்பெஷல் கெஸ்ட்டாக பங்கேற்று மாஸ் காட்டினார்.
இந்நிலையில், பாடல்களை தொடர்ந்து வெளியான பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் ரசிகர்களை உணர்ச்சிவசப்பட செய்துள்ளது.

#image_title
கடலில் விழுந்து இறந்து போனதாக பொன்னியின் செல்வன் முதல் பாகம் முடிந்த நிலையில், அருள்மொழி வர்மனும், வந்தியத்தேவனும் ஊமைத் தாயின் உதவியால் எப்படி மீண்டு மீண்டும் சோழ தேசத்திற்கு வந்தார்கள் என்பதையும் சோழர்களை பழிவாங்க நந்தினி துடித்துக் கொண்டிருப்பதையும் முடி சூட மதுராந்தகன் போடும் சதி விளையாட்டு ஒரு பக்கம் என்றும் இறுதியாக ஆதித்த கரிகாலனை கடம்பூர் மாளிகையில் தனது கையில் வாளேந்தி நந்தினி ஐஸ்வர்யா ராய் கொல்லத் துடிக்கும் அந்த கிளைமேக்ஸ் காட்சி என ஒவ்வொரு ஃபிரேமுமே மிரட்டலாக உள்ளது.