சினிமா செய்திகள்
குக் வித் கோமாளி’ சீசன் 2 அரையிறுதிக்கு செல்வது இந்த போட்டியாளரா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இன்றும் நாளையும் வைல்ட்கார்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி போட்டியாளர் அரையிறுதிக்கு தகுதி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அஸ்வின், பாபா பாஸ்கர் மற்றும் கனி ஆகிய மூவர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் நான்காவதாக அரையிறுதிக்கு தகுதி பெறும் நபர் யார் என்பது நாளை தெரியவரும்.
இந்த நிலையில் பவித்ரா, மதுரை முத்து, தீபா, ரித்திகா, ஷகிலா, ஆகிய 6 பேரும் இன்றும் நாளையும் வைல்ட்கார்டு போட்டியில் விளையாடி வரும் நிலையில் இந்த போட்டியில் ஷகிலா வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் நாளை வரை பொறுத்திருந்து இந்த தகவலை உறுதி செய்வோம்.


















