தமிழ்நாடு
ஆண்களுக்கும் பாலியல் தொந்தரவு நடக்கிறது: கவுதமி கருத்து!

பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பாலியல் தொந்தரவுகள் நடக்கிறது. ஆண்களும் பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்படுகிறார்கள் என நடிகை கவுதமி கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகை கவுதமி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கவுதமி, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில்தான் பாலியல் தொந்தரவுகள் நடக்கின்றது. குடும்பத்தை சேர்ந்தவர்களால் கூட பாலியல் தொந்தரவுகள் நடக்கின்றது போன்ற கேள்விகள் குத்திக்காட்டுவதாகவும், மனதை புண்படுத்தும் விதமாகவும் உள்ளது.
இந்த மாதிரியான பாலியல் கொடுமைகள் பெண்களுக்கு மட்டுமல்லமல் ஆண் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பல விதங்களில், பல சூழ்நிலைகளில், பல நபர்களால் நடக்கின்றது. எப்போதும் அனைத்து தரப்பினரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார் கவுதமி.







