செய்திகள்
மகளிர் உரிமைத்தொகை ரூ.1500 ஆக உயர்வு – மத்திய பிரதேச முதல்வர் அதிரடி அறிவிப்பு!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1500 ஆக உயர்வு – மத்திய பிரதேசத்தில் முக்கிய அறிவிப்பு!
மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகையான ‘லட்லி பெஹனா யோஜனா’ திட்டத்தின் கீழ் தற்போது ரூ.1250 வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் மோகன் யாதவ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், சிறப்பு போனஸாக முழு தொகையாக ரூ.1500 வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனால், வரும் மாதம் மத்திய பிரதேச மாநில பெண்கள் அதிகரிக்கப்பட்ட தொகையை பெற உள்ளனர். இந்த முடிவு பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திட்டம் தமிழகத்தில் முதன்முதலில் செயல்படுத்தப்பட்ட ‘மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தை ஒட்டியே உருவாக்கப்பட்டது. தற்போது, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதுபோன்ற உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

பெண்களுக்கான மத்திய அரசு திட்டங்கள் vs தமிழ்நாடு அரசு திட்டங்கள் – சிறந்தது எது?

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 5 புதிய அப்டேட்டுகள்

ஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியம்: மாதம் ரூ.1500 வழங்கும் தமிழக அரசின் சிறப்பு திட்டம்!

மகளிர் உரிமைத் தொகை – புதிய விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

பட்ஜெட் 2025-26: பெண்களுக்கு கிடைத்த முக்கிய நன்மைகள்







