சினிமா செய்திகள்
தொடங்கப்படாத தனுஷ் படம்; அதற்குள் நீக்கப்பட்ட நடிகர்!

தனுஷ் படம் தொடங்கப்படுவதற்கு முன்பே பிரபல நடிகர் நீக்கப்பட்டு இருக்கிறார்.
நடிகர் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு அடுத்து அவரது ஐம்பதாவது படம் உருவாக இயக்குகிறது.
இதனை தனுஷே இயக்குவாரா அல்லது அவரது கதையை வேறு இயக்குநர் இயக்குவாரா என்பது இன்னும் தெளிவுப்படுத்தவில்லை. செல்வராகவன், மித்ரன் ஜவஹர் உள்ளிட்ட சில இயக்குநர்களது பெயரும் இதில் அடிபடுகிறது.
இந்தக் கதையை முதலில் நடிகர் விஷ்ணு விஷாலிடம் சொல்லி நடிக்கக் கேட்டிருக்கிறார் தனுஷ். அவரும் கதைப்பிடித்துப் போய் உடனே படத்தில் தனுஷின் சகோதரராக நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் விஷ்ணு விஷால்.

இந்தப் படத்திற்கு தயாரிப்பாளர் கிடைப்பது தாமதமாக அதற்குள் ஐஷ்வர்யா ரஜினிகாந்த்தின் ‘லால் சலாம்’ படத்தில் நடிக்க கிளம்பி விட்டார் விஷ்ணு விஷால்.
இதற்கிடையில், விஷ்ணு விஷாலின் தேதியை கேட்டிருக்கிறார் தனுஷ். அதுமுடியாமல் போக, தனுஷ் படத்தில் இருந்து விஷ்ணு விஷால் நீக்கப்பட்டு இருக்கிறார். இன்னும் தனுஷின் இந்தப் படம் தொடங்கப்படவே இல்லை என்பதுதான் இதில் ஹைலைட்டான விஷயம்.