உலகம்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் சேமிப்பு பத்திரம் இலவசம்: எங்கு தெரியுமா?

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் சில சலுகைகளும் ஒரு சில மாநிலங்களில் அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் ஒரு மாநிலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 2 கிலோ தக்காளி இலவசம் என்ற அறிவிப்பின் காரணமாக ஏராளமான மக்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா என்ற மாகாணத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் சேமிப்பு பத்திரம் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 16 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 100 அமெரிக்க டாலர் மதிப்புள்ள சேமிப்பு பத்திரம் இலவசமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகை இந்திய மதிப்பில் ரூபாய் 7400 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேமிப்பு பத்திரத்திற்காகவாவது பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் இந்தியாவிலும் அரசு சில சலுகைகளை தடுப்பூசி போடுபவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.




















