தமிழ்நாடு
சசிகலா புஷ்பா வீட்டில் அரைகுறை ஆடையுடன் மர்ம நபர்: புகாரளித்த 2வது கணவர்!

அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு தாவிய சசிகலா புஷ்பாவின் வீட்டில் அரைகுறை ஆடையுடன் மர்ம நபர் ஒருவர் இருந்ததாக அவருடைய இரண்டாவது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தேசிய குழு உறுப்பினராக இருந்து வரும் சசிகலா புஷ்பாவை ராமசாமி என்ற வழக்கறிஞர் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்பது குறிபிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் வழக்கறிஞர் ராமசாமி தனது வீட்டு கதவை நேரம் தட்டியும் திறக்கவில்லை. சில நிமிடங்கள் கழித்து அமுதா என்ற பெண் அரைகுறை ஆடைகளுடன் கதவை திறந்துள்ளார். அந்த பெண் யார் என்றே தெரியாத நிலையில் அதிர்ச்சியுடன் ராமசாமி வீட்டிற்கு சென்று பார்த்தபோது சசிகலா ஒரு அறையிலும் இன்னொரு அறையில் மர்ம நபர் ஒருவர் அரைகுறை ஆடையுடன் இருந்ததை பார்த்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அனைத்தையும் தனது செல்போன் மூலம் படம் எடுத்துள்ளார். பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தான் வீட்டில் இல்லாத நேரத்தில் ஒரு மர்ம நபரையும் ஒரு பெண்ணையும் தனது வீட்டிற்குள் அனுமதித்தது குறித்து சசிகலா புஷ்பாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது புகாரில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


















