சினிமா
விஜய்க்கு நெருக்கமானவர்.. யார் இந்த வருண் ராஜேந்திரன்!

சென்னை: உதவி இயக்குனராக இருக்கும் வருண் ராஜேந்திரன் தன்னுடைய கடினமான முயற்சியின் மூலம் செங்கோல் – சர்கார் பிரச்சனையில் வெற்றிபெற்றுள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ். இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள சர்கார் படத்தின் கதையும், வருண் ராஜேந்திரன் எழுதிய செங்கோல் கதையும் ஒன்றுதான் என்று நிரூபணம் ஆகியுள்ளது.
துணை இயக்குனராக இருக்கும் வருண் ராஜேந்திரன் 2004ல் இந்த கதையை எழுதி இருக்கிறார். அரசியல் ஆர்வம் கொண்டு இவர் எழுதிய சில முக்கிய கதைகளில் செங்கோல் கதையும் ஒன்று என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் கதையை விஜய்க்குத்தான் வருணும் எழுதியுள்ளார். இவர் கோலிவுட்டில் கடந்த 15 வருடமாக உள்ளார். இதில் பல வருடங்கள் உதவி இயக்குனராக இருந்துள்ளார்.
சில படங்களில் இணை இயக்குனராக இருந்துள்ளார். சில படங்களில் ஸ்கிரிப்ட் வேளைகளில் வேலை பார்த்து இருக்கிறார். விஜயின் அப்பா எஸ்.வி சந்திரசேகரிடம் இவர் உதவி இயக்குனராக இரண்டு படங்களில் வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




















