தமிழ்நாடு
37 தொகுதிகளில் மட்டுமே போட்டி: 3 தொகுதிகளை திருப்பி கொடுத்துவிட்ட சரத்குமார்

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணியில் இணைந்த சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் 37 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் அதன்பின்னர்தான் மூன்று தொகுதிகளை கமல்ஹாசனிடம் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த தேர்தலில் சரத்குமார் மற்றும் ராதிகா போட்டியிடவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்த போது ராதிகாவுக்கு துணை முதல்வர் பதவி குறித்து பேசப்பட்டது என்றும் அதற்கு கமல்ஹாசன் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது ராதிகா மற்றும் சரத்குமார் ஆகிய இருவருமே தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








