சினிமா செய்திகள்
பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு 12.5 லட்சம் மதிப்பு கார் கொடுத்த சமந்தா: ஏன் தெரியுமா?

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு 12.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக கொடுத்த நிகழ்வு அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது பெற்றோர் மறைவுக்கு பின்னர் தனது ஏழு சகோதரிகளை காப்பாற்றுவதற்காக ஆட்டோ ஓட்டி வந்தார். அவரது வருமானத்தில்தான் அவரது ஏழு சகோதரிகள் படித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுகுறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தும்போது அறிந்து கொண்ட சமந்தா, அப்போதே பெண் ஆட்டோ ஓட்டுநர் எனக்கு பாராட்டு தெரிவித்ததோடு கண்டிப்பாக தன்னால் முடிந்த உதவியை செய்வதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அந்த பெண் ஆட்டோ ஓட்டுனரின் வாழ்வாதாரத்திற்காக 12.5 ரூபாய் மதிப்புள்ள புதிய கார் ஒன்றை வாங்கி கொடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த காரை ஓட்டி அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து அவர் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொள்ளலாம் என்று சமந்தா அறிவித்துள்ளார்.
சமந்தாவின் இந்த சர்ப்ரைஸ் பெண் ஆட்டோ ஓட்டுநர் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது சமந்தா ஏற்கனவே பல்வேறு நபர்களுக்கு சமூகசேவை செய்துள்ள நிலையில் தற்போது அந்த பட்டியலில் விலை மதிப்புள்ள கார் வாங்கி கொடுத்த நிகழும் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


















