சினிமா செய்திகள்
’ஓ சொல்றியா மாமா: ரிகர்சல் வீடியோவை பகிர்ந்த சமந்தா

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஓ சொல்றியா மாமா என்ற பாடலின் படப்பிடிப்புக்கு முன்னர் நடந்த ரிகர்சல் வீடியோவை நடிகை சமந்தா யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படத்தில் சமந்தா ஆடிய ஐட்டம் டான்ஸ் பாடல் ’ஓ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா’ என்ற பாடல் மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் இந்த பாடலுக்கு சில ஆண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இளைஞர்கள் மத்தியில் இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக பாடலாசிரியரும் தெரிவித்திருந்தார் என்பதும் இந்த பாடலை பாடிய ஆண்ட்ரியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த பாடலுக்கு டான்ஸ் ரிகர்சல் செய்யும் போது எடுத்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் ரசிகர்கள் இதனை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.