Connect with us

இந்தியா

ஏப்ரல் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

Published

on

திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்ய இலவச தரிசன டிக்கெட் மற்றும் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வரும் நிலையில் வரும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரூபாய் 300 தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் தேதிகளை திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கான ரூபாய் 300 தரிசன டிக்கெட் இம்மாதம் 21ஆம் தேதியும், மே மாதத்திற்கான ரூபாய் 300 தரிசன டிக்கெட் இம்மாதம் 22ஆம் தேதியும், ஜூன் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இம்மாதம் 23ஆம் தேதியும் ஆன்லைனில் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் திங்கள் முதல் புதன் வரை தினமும் 30000 டிக்கெட்டுக்களும், வியாழன் முதல் ஞாயிறு வரை தினமும் 25 ஆயிரம் டிக்கெட்டுகளும் ஆன்லைனில் வழங்கப்படும் என்றும், இந்த டிக்கெட்டுக்களை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது .

அதேபோல் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் , பேருந்து நிலையம் எதிரில் உள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸ் , ரயில் நிலையம் பின்புறம் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி சத்திரம் ஆகிய இடங்களில் நேரடியாகவும் சென்று இந்த டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
me profile.