இந்தியா
விமானத்தில் ஏறியவுடன் வரவேற்கும் ரத்தன் டாடாவின் குரல்: ஏர் இந்தியா பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி!

ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய உடன் ரத்தன் டாடாவின் குரல் பயணிகளை வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்டிருப்பது பயணிகளுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமானம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் அந்த நிறுவனத்தை டாடா குழுமம் 18 ஆயிரம் கோடிக்கு விலைக்கு வாங்கியது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை மத்திய அரசு டாடா குழுமத்திடம் அதிகாரபூர்வமாக ஒப்படைத்தது. இதனை அடுத்து தற்போது டாடாவின் ஏர் இந்தியா என்று விமான நிறுவனம் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏர் இந்தியா விமானத்தில் விமான பயணிகள் ஏறியவுடன் டாடாவின் குரல் ஒலிக்கிறது. அந்த குரலில் ஏர் இந்தியா நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை வரவேற்கிறது. ஏர் இந்தியா நிறுவனத்தை விமான பயணிகள் விரும்பும் தேர்வு செய்யும் விதமாக மாற்ற பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். பயணிகளுக்கான சேவை மூலம் இது நிறைவேறும் என்று நம்பிக்கை கொள்கிறோம் என்று ரத்தன் டாடா குரல் ஆடியோவாக ஒலிக்கிறது. இந்த ஆடியோவை கேட்டு ஏர் இந்திய பயணிகள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
#FlyAI: A warm welcome extended by Mr Ratan Tata, Chairman Emeritus, Tata Sons, Chairman Tata Trusts, to our passengers onboard Air India flights. pic.twitter.com/MkVXEyrj3J
— Air India (@airindiain) February 2, 2022



















