Connect with us

இந்தியா

விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் எப்படி உறுதி செய்யப்பட்டது?

Published

on

அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்திலிருந்து இன்று லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி எரிந்தது. இதில் விமானத்தில் பயணித்த குஜராத் மாஜி முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் பலியாகினர்.

சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து இந்த ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் மதியம் 1:39 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட ஒரு நிமிடத்தில் விமானம் விபத்தில் சிக்கியது.

விமானம் பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதி மற்றும் அருகிலுள்ள குடியிருப்புகளில் மோதியதால் மொத்தமாக 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 குழுவினர் என மொத்தமாக 242 பேர் பயணித்தனர் — இவர்களில் ஒருவர் மட்டுமே பிழைத்துள்ளார்.

2016 மற்றும் 2021 ஆண்டு வரை குஜராத் முதலமைச்சராக இருந்து வந்த விஜய் ரூபானி, தனது மகளை பார்க்க லண்டன் சென்றுவிட்ட போது இப்படியொரு சோகம் நடந்தது.

விமான விபத்தில் உயிரிழந்தோர் எரிந்து கரியதால் அடையாளம் காண்வது கடினமாக இருந்தது. இதன் அடிப்படையில்தான் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு அடையாளம் உறுதி செய்யப்பட்டது. விஜய் ரூபானியின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட டிஎன்ஏ மற்றும் சடலங்களில் எடுக்கப்பட்ட மாதிரியை ஒப்பிட்ட போது அது பொருந்தியதால் அடையாளம் உறுதி செய்யப்பட்டது என குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.

விஜய் ரூபானியின் இறுதி சடங்கு ராஜ்கோட்டில் நடைபெறும் என சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடி, விஜய் ரூபானியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார் மற்றும் விபத்து நடந்த இடத்திற்கும் சென்றுள்ளார்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Nhập email đăng ký của bạn để đặt lại mật khẩu. Kliv in i friheten bakom ratten rogertech. Nhưng lịch sử trò chuyện bị thẩm Úc nhìn thấy được, hắn nhẹ nhàng xóa kết liên hệ bạn cùng bàn của ta khỏi điện thoại, lập ra gia quy đầu tiên là “không được đi chơi riêng với người khác giới”.