சினிமா
அட்டு ஃபிளாப் ஆனாலும் தலைவிக்கு தில்ல பார்த்தியா; அரண்மனை 4 அப்டேட் கொடுத்த ராஷி கன்னா!

சுந்தர் சி இயக்கி நடிக்கும் அரண்மனை 4ம் பாகத்தின் ஷூட்டிங் இன்று ஆரம்பம் ஆகி விட்டதாக அந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் ராஷி கன்னா ஹாட் அப்டேட் கொடுத்துள்ளார்.
ஹாரர் த்ரில்லர் மற்றும் காமெடி ஜானரை சேர்ந்த அரண்மனை வரிசை படங்கள் 1,2 மற்றும் 3 என இதுவரை 3 பாகங்கள் வெளியாகி உள்ளன. அரண்மனை முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் ஹன்சிகா நடித்து வந்த நிலையில், 3ம் பாகத்தில் ராஷி கன்னா நடித்தார்.

#image_title
அரண்மனை 3ம் பாகத்தில் ராஷி கன்னாவுக்கு ஜோடியாக ஆர்யா நடித்தார். மேலும், அந்த படத்தில் பேயே ஆர்யா தான் என சுந்தர் சி போட்ட போடில் படம் படுத்தே விட்டதே.
முதல் 2 பாகங்கள் அடைந்த வெற்றியை அரண்மனை 3ம் பாகம் கொஞ்சமும் பெறவில்லை. ஆனாலும், கவலையே இல்லாமல் அரண்மனை 4ம் பாகத்திலும் பெரிய தொகையை சம்பளமாக வாங்கிக் கொண்டு நடிக்க துவங்கி விட்டார் ராஷி கன்னா என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

#image_title
விஜய்சேதுபதி முதலில் நடிக்க ஒப்புக் கொண்டு பின்னர், அய்யோ இந்த கதையா வேண்டாம்ப்பா சாமி என எஸ்கேப்பாகி விட்டார். கடைசியாக 3 பாகத்திலும் ஹீரோவாக நடித்து வந்த சுந்தர். சியே இந்த படத்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக தமன்னா மற்றும் ராஷி கன்னா இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்தியில் ராஷி கன்னா நடித்த வெப்சீரிஸ் எல்லாம் நல்லா ஓடிக் கொண்டிருக்கும் போது, மீண்டும் அரண்மனை 4 மூலம் ரிஸ்க் எடுப்பது ஏன் என்கிற கேள்விகளையும் அவரது ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.