சினிமா
லியோ படத்தில் இணைந்த இன்னொரு மலையாள நடிகர்; இன்னும் எத்தனை பேர் வருவாங்களோ?

விஜய்யின் லியோ படத்தில் புதிதாக மலையாள நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே மினி சினிமா பட்டாளமாகவே லியோ படத்தின் படப்பிடிப்பு அரங்கேறி வரும் நிலையில், இன்னும் எத்தனை பேர் தான் இணைவார்கள் என ரசிகர்கள் தலையை பிய்த்துக் கொண்டு வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலி கான், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

#image_title
மாளவிகா மோகனனின் கிறிஸ்டி படத்தில் இளம் நடிகராக நடித்து மாளவிகாவுடன் அப்படியொரு ரொமான்ஸ் பண்ண மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் நடித்து வரும் நிலையில், தற்போது மேலும், ஒரு மலையாள நடிகராக ஜோஜு ஜார்ஜ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல் 60 நாள் ஷூட்டிங்கில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்கிய நிலையில், அடுத்த 60 நாட்களுக்கு ஃபிரெஷ்ஷாக மேலும், பல நடிகர்களை உள்ளே கொண்டு வரப்போகிறாரா என கேள்விகள் எழுந்துள்ளன.
விஜய்சேதுபதி டப்பிங் கொடுக்க 3 நாட்கள் புக் செய்யப்பட்ட நிலையில், எல்சியூவாக மட்டும் இந்த படம் இருந்தால், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரது அதிரடி என்ட்ரிக்களும் இந்த படத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஜோஜு ஜார்ஜ் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான அவரது மலையாள திரைப்படமான இரட்ட திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.