தமிழ்நாடு
திடீரென மாயமான என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ: புதுவையில் பரபரப்பு

புதுவையில் பாஜக, அதிமுக மற்றும் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பணிகளும் முடிவடைந்து விட்டது என்பதும் இன்றுக்குள் அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்தே ஒருசில எம்எல்ஏக்கள் இந்த கூட்டணி குறித்து அதிருப்தியில் இருந்தனர். அந்த வகையில் புதுச்சேரியில் உள்ள மண்ணாடிப்பட்டு என்ற தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அந்த தொகுதியில் உள்ள தற்போதைய என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வம் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென அவர் சில நாட்களாக மாயமானதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அவர் எங்கு சென்றார் என்று தெரியாத நிலையில் அவரை தேடும் பணியில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் உள்ள மண்ணாடிப்பட்டு தொகுதி மீண்டும் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தால் தனக்கு சீட் கிடைத்து இருக்கும் என்றும், ஆனால் அந்த தொகுதி பாஜகவுக்கு சென்று இருப்பதால் மீண்டும் எம்எல்ஏ செல்வதற்கு சீட் கிடைக்காத விரக்தியில் செல்வம் எம்.எல்.ஏ மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

















