Connect with us

சினிமா செய்திகள்

’வெல்டன் அண்ணாத்த’: அரசியலுக்கு குட்பை சொன்ன ரஜினிக்கு வாழ்த்து கூறிய பிரபல தயாரிப்பாளர்!

Published

on

Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த ஆண்டு அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என்று கூறிய நிலையில் அவர் தனது உடல்நிலையை கணக்கில்கொண்டு அரசியலுக்கு வரவில்லை என்றும், புதிய கட்சி தொடங்க போவதில்லை என்றும் தெரிவித்தார்/

இந்த நிலையில் சமீபத்தில் அரசியல் கட்சிக்காக அமைக்கப்பட்டிருந்த ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டதாகவும் இனி அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறியிருந்தார். இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் தற்போது வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்த முடிவு சரியானது என பிரபல தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் தெரிவித்துள்ளார். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரை தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் செய்த கேடி குஞ்சுமோன். இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு மற்றும் அரசியலுக்கு முழுக்கு ஆகிய ரஜினியின் அறிவிப்பு என்னைப்போன்ற ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. ரஜினி வருடத்திற்கு இரண்டு படங்களில் நடித்தால் தான் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும், சினிமா தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணம் தமிழ் சினிமாவே சிதைந்து போயிருக்கிறது. இந்த நேரத்தில் ரஜினிகாந்த் சரியான முடிவு எடுத்து திரையுலகினர் மனதில் பாலை வார்த்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த தங்க மகன், மூன்றுமுகம், படிக்காதவன், ஊர்க்காவலன் போன்ற படங்களை நான் வெளியிட்டுள்ளேன். என்னை போலவே ரஜினியின் படங்களால் பலர் லாபம் சம்பாதித்துள்ளனர். ரஜினிக்கும் எனக்கும் 40 வருட பழக்கம் உள்ளது. சினிமாவில் அவர் ஒரு பணம் காய்க்கும் மரம். தயாரிப்பாளர்களின் தங்கப்புதையல் அவர அனைவராலும் போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். அவர் பூரண ஆரோக்கியத்துடன் நல்ல உடல்நலத்துடன் வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன். சினிமாவில் சிகரமாக இருக்கும் அவருக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள். ’வெல்டன் அண்ணாத்த’ என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்..

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Chương 5357 : Đại kết cục. Tiktok linkedin. Nhập email đăng ký của bạn để đặt lại mật khẩu.