Connect with us

இந்தியா

பெண்களுக்கான பிரத்யேக முதலீடு திட்டம்.. 7.5 சதவிகித வட்டி..

Published

on

கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வரும் நிலையில் தற்போது பெண்களுக்கு என்ன பிரத்யேக திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் முதலீடு செய்தால் அவர்களுக்கு 7.5% வட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் குறித்து தற்போது பார்ப்போம்.

பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது வருமான வரி அடுக்குகளில் மாற்றங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள பல சேமிப்புத் திட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிவித்தார். இந்த நிலையில் அவர் அறிவித்த முக்கிய திட்டங்களில் ஒன்று மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் என்பது பெண்களுக்கான புத்தம் புதிய திட்டமாகும். வரும் ஏப்ரல் முதல் இந்த திட்டம் தொடங்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம் அறிமுகம் செய்யப்படும். இந்த திட்டத்தை விளம்பரப்படுத்த பொதுத்துறை வங்கிகள் தனித்துவமான முயற்சிகளை பயன்படுத்த வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிந்துரைத்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் பெண்கள் அல்லது சிறுமிகளின் பெயரில் இரண்டு வருட காலத்திற்கு ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதற்கு வட்டியாக 7.5% வழங்கப்படும்

இந்த திட்டம் குறித்து Bankbazaar.com தலைமை நிர்வாக அதிகாரி ஆதில் ஷெட்டி கூறியபோது, ‘வங்கி FDகளை விட வருமானம் அதிகம் தரக்கூடியது என்று தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் இணைய என்னென்ன தகுதி மற்றும் வழிமுறைகள் குறித்து தற்போது பார்ப்போம்.

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழை ஒரு பெண் அல்லது பெண்ணின் பெயரில் மட்டுமே தொடங்க முடியும்.

மஹிலா சம்மன் பச்சத் பத்ரா யோஜனா படிவத்தைப் பெற, இந்தத் திட்டத்தை வழங்கும் அருகிலுள்ள வங்கி அல்லது தபால் நிலையத்திற்குச் செல்லவும். உங்கள் நிதி, தனிப்பட்ட மற்றும் நியமனத் தகவல்களுடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் அடையாளம் மற்றும் முகவரி சரிபார்ப்பு போன்ற தேவையான ஆவணங்களுடன் படிவத்தை நிரப்ப வேண்டும். டெபாசிட் தொகையை முடிவு செய்து, பணம் அல்லது காசோலையைப் பயன்படுத்தி டெபாசிட் செய்யலாம். மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ததற்கான சான்றிதழை வங்கி அல்லது தபால் நிலையம் உங்களுக்கு வழங்கும்.

இந்த திட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு 2,000,000 நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு ஆண்டுக்கு 7.5% வட்டி விகிதம் கிடைக்கும். அதன்படி முதல் ஆண்டில் ரூ.15,000 வட்டியும், இரண்டாம் ஆண்டு ரூ.16,125 வட்டியும் கிடைக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு உங்கள் அசல் தொகையுடன் சேர்த்து ரூ.2,31,125 நீங்கள் பெறுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?