தமிழ்நாடு
பாதிரியார் பெனடிக் ஆன்றோவின் லீலைகள்: மேலும் 4 பெண்கள் புகார்!

பெண்களிடம் ஆபாசமாக, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சர்ச்சை இளம் பாதிரியார் பெனடிக் ஆன்றோ நேற்று அதிரடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது தற்போது மேலும் 4 பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்துள்ளனர்.

#image_title
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்த பெனடிக் ஆன்றோ பிலாங்காலை பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவர் தேவாலயத்துக்கு வரும் பல இளம் பெண்களிடம் வாட்சப் சாட் மற்றும் வீடியோ காலில் ஆபாசமாக பழகி வந்துள்ளார். நிர்வாண புகைப்படங்களை அனுப்புதல் என பல பெண்களிடம் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பான பல ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், வாட்சப் சாட்கள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் பாதிரியார் பெனடிக் ஆன்றோ மீது ஆஸ்டின் ஜினோ என்பவர் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இதனையடுத்து ஆபாச பாதிரியார் பெனடிக் ஆன்றோ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த பாதிரியாரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் அவரை நேற்று நாகர்கோவில் பால்பண்னை பகுதியில் காரில் தப்பித்துசெல்ல முயன்றபோது மடக்கி பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.
இந்த பாதிரியார் ஆலய பணிக்காக மதுரை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். அங்கும் ஆலயங்களுக்கு வரும் இளம்பெண்களை மயக்கி தனது வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மிரட்டியதாக தெரிகிறது. இதனையடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவால் மிரட்டப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுக்கலாம், அவர்களுடைய பெயர் விவரம் ரகசியம் காக்கப்படும் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மேலும் 4 பெண்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால், மேலும் பல அதிர்ச்சியளிக்கும் லீலைகள் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் பல பாதிக்கப்பட்ட பெண்கள் பாதிரியார் மீது புகார் அளிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.