சினிமா செய்திகள்
போட்டோ ஷூட்டின் போது ஆற்றில் தவறிவிழுந்த பிரபல நடிகை – வைரல் வீடியோ!
Published
2 years agoon
By
Barath
நடிகைகள் பல லொக்கேஷன்களுக்கு சென்று வித விதமாக போட்டோ ஷூட் நடத்துவது இயல்புதான். ஆனால், லொக்கேஷன்களுக்கு ஏற்றது போல, பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியது அவசியம். அதில் கொஞ்சம் கவனம் சிதறினாலும் அசம்பாவிதம் ஏற்படும்.
அப்படித்தான் பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகையான ஹனி ரோஸ், சில நாட்களுக்கு முன்னர் காட்டுப் பகுதியில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். ஆற்றங்கரைக்கு அருகில் ஃபுல் மேக்கப்போடு அவர் போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று தவறி விழுந்துள்ளார். இது குறித்த வீடியோவை அவரே, தன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். தான் ஆற்றுக்குள் விழுந்த வீடியோவை ஹனி ரோஸே வெளியிட்டுள்ளது பலருக்கு ஆச்சரயத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹனி ரோஸ் பல்வேறு மலையாள மற்றும் தெலுங்கு மொழிப் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஜீவா, சந்தானம் மற்றும் திவ்யா ஸ்பந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘சிங்கம் புலி’ படத்தில் ஹனி ரோஸ் நடித்தார். 29 வயதாகும் ஹனி ரோஸுக்கு அடுத்தடுத்து பல படங்கள் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.
வைரல் வீடியோ இதோ:
You may like
-
ஒரு மாத கரண்ட் பில் வெறும் 5 ரூபாய்: வைரலாகும் புகைப்படம்!
-
காதலில் விழலாம்.. மணமேடையில் விழலாமா? திருமண போட்டோஷூட்டில் நடந்த விபரீதம்!
-
கர்ப்பமான வயிறு, கணவருடன் போட்டோஷூட் எடுத்த நமீதா: வைரல் புகைப்படங்கள்
-
என் கூட வந்தால் தினமும் 2000 ரூபாய் வருமானம் கிடைக்கும்: கடைக்காரரை அழைத்த பிச்சைக்காரர்
-
’மாஸ்டர்’ பட நடிகையை படுக்கைக்கு அழைத்த பேராசிரியர்: நடிகையின் ரியாக்சன் என்ன தெரியுமா?
-
பிரியா பவானிசங்கரா இவர்? முடிச்சு போட்ட மேலாடைக்கு குவியும் லைக்ஸ்!